Categories
மாநில செய்திகள்

“அரியர் போட்ட மாணவர்களை ஆல்பாஸ் செய்ய எதிர்ப்பு”… வெளியான தகவல் தவறு… உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்…!!

பொறியியல் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய கூடாது என்று வெளியான தகவல் பொய்யானது என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ,பொறியியல் படிப்புகளில் அரியர் போட்டிருந்த மாணவர்களை ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் கூறியதாக தகவல் ஒன்று வெளியாகியது. மேலும் அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஏஐசிடிஇ மின்னஞ்சல் செய்தி அனுப்பி இருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது.

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் இது குறித்து கொடுத்த விளக்கத்தில், அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய ஏஐசிடிஇ எதிர்ப்பு என்று வெளியான தகவல் பொய்யானது என்று அவர் கூறியுள்ளார். மேலும் அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்யவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஐசிடிஇயிடம் இருந்து எந்த ஒரு மின்னஞ்சலும் வரவில்லை. ஆனால் இந்தக் குழப்பத்தின் முக்கிய காரணமாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தனது கருத்தை ஏஐசிடிஇ கருத்தாக கூறி வருகிறார் என்று நினைப்பதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |