சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்க்_க்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சீன அதிபர் இன்று சென்னை வருகின்றார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு கண்ட்சிபுரம் மகாபலிப்புரத்தில் நடைபெறுகின்றது. இன்று 1.30 மணிக்கு சென்னை வரும் சீன அதிபர் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்குகின்றார். இங்கு சீன அதிபர் தங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துள்ளது.
இந்நிலையில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே 5 திபெத்தியர்கள் சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் கொடியுடன் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு வந்த போலீசார் போராட்டம் நடத்திய 5 பேரையும் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போராட்டம் நடத்திய 5 பேரில் 3 பேர் பெண்கள் ஆகும். இவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.