Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு எதிர்ப்பு…. ஷி ஜின்பிங்_க்கு ஆதரவு…. விரட்டும் தமிழகம் … கதறும் பாஜக …!!

மோடி , சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது 

இன்று பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பை உலகமே உற்று நோக்குகின்றது. மேலும் இதற்காக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சீனா அதிகாரிகளுடன் சேர்ந்து இந்திய அதிகாரிகள்மற்றும் தமிழக அதிகாரிகள் முன்னேற்பாட்டை கவனித்து வந்தனர்.

இரு தலைவர்கள் வருகையையொட்டி சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மிக பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் காத்திருக்கின்றன. அதே வேளையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பாஜகவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது உலக நாடுகளையே மோடி பக்கம் திருப்பியுள்ளது. ஆம் மீண்டும் #GoBackModi  ஹேஷ்டேக் சமூக வலைத்தலத்தில் வைரலாகின்றது.

இந்திய பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் #GoBackModi ஹேஷ்டேக் ட்ரெண்டாவது வழக்கம். ஆனால் இன்று சீன அதிபர் வருகையையொட்டி இருவரின் சந்திப்பு தமிழகத்தில் நடைபெறும் இந்த சூழலில் இந்த ட்ரெண்டிங் பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதில் என்ன வேடிக்கை என்றால் சீன அதிபரை வரவேற்று #TN_welcomes_XiJinping என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகுகின்றது.

சீன அதிபரை வரவேற்கும் தமிழகம் இந்திய பிரதமரை வெறுப்பது தான் உலக நாடுகளின் பார்வை மோடி மீதும் , பாஜக மீதும் விழுந்துள்ளது. இன்று காலை முதலே மோடிக்கு எதிரான ஹேஷ்டேக் இந்தியளவில் முதலிடத்திலும் , சீன அதிபரை வரவேற்ற ஹேஷ்டேக் இந்தியளவில் இரண்டாவது இடத்திலும் ட்ரெண்டாகி வருகின்றது.

Categories

Tech |