Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிரி கட்சி ஸ்டாலினுக்கு கைவந்த கலை…. வாழ்வாதாரத்தை முடக்கிப் போட முடியுமா ? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி …!!

கொரோனா இறப்பை மறைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிந்தாதிரிப்பேட்டையில் கபசுர குடிநீர் முக கவசம் ஊட்டச் சத்து மாத்திரைகளை வழங்கினார் அமைச்சர் ஜெயக்குமார். பின்னர் செய்தியாளர்களின் பல கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அதில், உயிரிழப்பை பொருத்தவரை ஒரு உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி நாம ரொம்ப ரொம்ப குறைவு. கிட்டத்தட்ட ஜீரோ புள்ளி 0.88 சதவீதம் தான். இது மற்ற மாநிலங்களில் கிட்டத்தட்ட அதிகமாக இருக்கிற சூழ்நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

13 ஆயிரம் பேர்தான் மருத்துவமனையில் இருக்காங்க. 55% மேல தான் குணமடைந்தோர் விகிதம் உள்ளது. உண்மை இவ்வாறு இருக்க, மக்களை திசை திருப்பும் பணியில் எதிர்க்கட்சி குறிப்பாக எதிரி கட்சியாக இருக்கின்ற ஸ்டாலினுக்கு கைவந்த கலை. இந்த நேரத்தில் அரசோடு ஒத்துழைப்பு நல்கி, முழுமையான அளவுக்கு இந்த கொரோனா போரில் எல்லோரும் ஒருங்கிணைந்து போராடுவதன் மூலமாக தான் நாம் வெற்றி பெற முடியும். இதை வைத்து அரசியல் செய்ய கூடாது. யார் அரசியல் செய்கிறார்களோ அவர்கள்  தான் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை முதலைமைசர் சேலத்தில் பேட்டி கொடுத்தார். உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. அமெரிக்கா, ஸ்பெயினில், பிரான்ஸ், சவுத்ஆப்பிரிக்கா இப்படி எல்லா நாடும் எப்படி புள்ளி விவரம் கொடுக்கின்றதோ அதே  அடிப்படையில் தான் இந்தியாவும் புள்ளி விவரம் கொடுக்கிறாங்க. இந்தியாவில் மொத்தம் எத்தனை கேஸ்,  தமிழ்நாட்டில் எத்தனை, மஹாராஷ்டிராவில் எத்தனை ? எவ்வளவு சோதனை செய்துள்ளோம் ? எவ்வளவு பேருக்கு பாசிட்டிவ், எவ்வளவு அட்மிசன், எவ்வளவு டிஜார்ஜ், எவ்வளவு சதவீத இறப்பு என தினமும் கொடுக்கும் போது மறைக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கு ? இதனால என்ன நன்மை அரசாங்கத்துக்கு சொல்லுங்க… ஒன்னும் கிடையாது.

முதலமைச்சர் சொன்னதுபோல சூழ்நிலைக்கேற்ப தளர்வுகள் என்பது அறிவிக்கப்படுத்து. கொரோனா கிட்டத்தட்ட ஆறு மாசமோ,  ஒரு வருஷமோ,  ரெண்டு வருஷமா இருக்கும். இரண்டு வருஷம் ஒருத்தருடைய வாழ்வாதாரத்தை முடக்கிப் போட முடியுமா ? யாராலயும் முடியாது. வாழ்வாதாரத்தையும் பாக்கணும்,  அதே நேரத்துல கொரோனாவை  கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கை எடுக்கணும். இந்த இரண்டு விஷயங்களும் தண்டவாளங்கள் மாதிரி.   தளர்வு கூட கட்டுப்பாடோடு தான் கொடுக்கப்படுகின்றது. கட்டுப்பாடில்லாமல் தளர்வுகள் கொடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சியினர் சொல்வதை ஒரு அரசியல் ரீதியாகத்தான் பார்க்கணுமே தவிர மற்ற ரீதியாக பார்க்க முடியாது.

Categories

Tech |