Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு…!!

தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் உள்ள திமுக மாணவர் அணியைச் சேர்ந்த மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாணவர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தில் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Image result for திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில்

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டங்களை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Categories

Tech |