Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSக்கு போட்டியாக களமிறங்கிய EPS…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பே இரண்டாக பிரிந்து விட்டது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு பல கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். இதில் முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட உள்ளதாக அதிமுக செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தலைமையில் நாளை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இபிஎஸ் தரப்பில் இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories

Tech |