அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கட்சிக்குள் மீண்டும் இபிஎஸ் கை ஓங்கியது. பொதுக்குழு நியமனத்தின்படி, இடைக்காலப் பொது செயலாளர் ஆனார் இபிஎஸ். இதனால் அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ் , இன்று உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறார். ஓபிஎஸ் – இபிஎஸ் இடையிலான பதவிப் போட்டியில் நீதிமன்ற தீர்ப்புகள் இருவருக்கும் மாறி மாறி சாதகமாக வருகின்றன. இந்த முறை காற்று இபிஎஸ் பக்கம் வீசியுள்ளதால், கடும் அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ், அடுத்து கையில் எடுக்கும் அஸ்திரம் மூக்கையா தேவரின் நினைவு நாள். அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் நாளை அஞ்சலி செலுத்தப்படும் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறார். இதனை பயன்படுத்தி தனது ஆதரவாளர்களை திரட்டி மாஸ் காட்ட ஓபிஎஸ் தரப்பு முயற்சித்து வருகிறதாம்.