Categories
மாநில செய்திகள்

OPS உடன் இணைவீர்களா?…. இப்படி சொல்லிட்டாங்களே சசிகலா…!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கி நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இவரது ஆதரவாளர்களை அவர் நீக்குவதும், அவரது ஆதரவாளர்களை இவர் நீக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் அதிமுக வங்கி கணக்கை பயன்படுத்துவது தொடர்பாக சர்ச்சை நீடித்து வருகிறது. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து வழக்கு நடைபெற்று வருகிறது. இருப்பினும் சசிகலாவும் நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் சென்று விட்டு சென்னை திரும்பிய சசிகலா நேற்று தியாகராயர் நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அவரது இலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவில் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தான் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தான் தொண்டர்கள் மத்தியில் தற்போது கவலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுக மூத்த நிர்வாகிகளின் ஒருவரான பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனை யார் பேசினார்களோ அவர்கள் அங்கிருந்து தானே பேசுகிறார்கள் அவர்களுக்கு ஒரு கருத்து தெரிந்திருக்கலாம், தெரிந்தும் கூட சொல்லி இருக்கலாம். இதனை பார்க்கும் மக்களுக்கு தெரிந்திருக்கும் அது யாருடைய குரல் என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் உங்களுடன் இணைந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த சசிகலா, கட்சியில் உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பழைய அதிமுகவாக இருக்க வேண்டும். வரும் காலங்களில் வெற்றிகளை பெற வேண்டும். கட்சியை மீட்டெடுக்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன். நான் பழைய பழனிச்சாமி இல்லையென இபிஎஸ் மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். மேலும் பழைய பழனிசாமி இல்லை என்று சொல்பவர்களுக்கு தான் அதில் என்ன இருக்கிறது என்று தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |