Categories
அரசியல்

“இந்த ஆட்சியில் தமிழகம் நாசமா போகுது”…. கடுமையாக சாடிய ஓபிஎஸ்…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும் திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு கிடையாது என்றும்  குற்றம் சாட்டி இருக்கிறார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பட்டப்பகலிலேயே கொலைகள், கொள்ளைகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. பாலியல் கொடுமைகளை அதிகரித்துள்ளது. தொழிலதிபர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் திமுகவினர் ஒவ்வொரு நாளும் தொந்தரவு கொடுத்து மிரட்டுகிறார்கள்.

அரசின் அனைத்து செயல்பாட்டிலும் திமுகவினரின் தலையீடு அளவுக்கு அதிகமாக இருப்பதை நான் என்ன அறிக்கையின் மூலம் குறிப்பிட்டு அவற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் வைத்தேன். எனினும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

திமுக, கடந்த எட்டு மாதமாக நடத்திய ஆட்சியில், அனைத்து தமிழ் மக்களுக்கும் ஆபத்து உண்டாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வேப்பங்குப்பத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக பணிபுரியும் சீனிவாசன் என்பவர் திமுகவினரின் தொடர் தொந்தரவால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யப்போவதாக கூறியிருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளருக்கு இந்த நிலை ஏற்பட்டால், மற்றவர்களின் நிலையை எண்ணிப் பார்க்கவே பயமாக இருக்கிறது. திமுகவினர் இவ்வாறான அட்டூழியங்களை நான் கடுமையாக  எதிர்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |