துணை முதல்வர் வீட்டிற்கு இரவு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி_யை துணை முதல்வர் உற்சாகமாக வரவேற்றார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை முதல் 10 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கின்றார். இதற்காக அவரை பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதனையடுத்து அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் OPS இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் வருவைத்தயடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரை வரவேற்றார். உடன் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.