வழிகாட்டுதல் குழுவுக்கான அதிகாரம் வழங்குவதில் இழுபறி நீடித்து என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று காலை முதலே தனித்தனியே முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அமைச்சர்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்த நிலையில் அது இரவு 10.30க்கு மேல் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் இழுபறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக ஒரு முடிவு என்பது எடுக்கப்பட்டாலும், அந்த குழுவிற்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் பல்வேறு பிரச்சினை இருப்பதாகவும், அது தொடர்பாகத்தான் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் வேட்பாளர் பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்துவது என்று முடிவு எடுக்கப் பட்டாலும், இந்த 15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் யார் யாரிடமிருந்து அதற்கான அதிகாரங்கள் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. முதலமைச்சரின் இல்லத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜர் உள்ளிட்டோரும், துணை முதலமைச்சர் இல்லத்தில் ஜெயக்குமார், தங்கமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், கேபி முனுசாமி ஆகியோர் தற்போது வரை ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று காலை முதல் தொடங்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்து இருந்து வருகிறது. பன்னீர்செல்வத்தை பார்த்தோமென்றால் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக இருக்கக் கூடிய நிலையில் அவருக்கு கூடுதல் அதிகாரங்கள் வேண்டும் என கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு இபிஎஸ் மறுப்பு தெரிவித்து இருப்பதாக தெரிகிறது. அது தொடர்பாகத்தான், அவரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில்தான் அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஈடுபட்டு வருவதாகவும் பேச்சுவார்த்தையில் இழுபறிக்கு காரணமாக கருதப்படுகிறது.