Categories
அரசியல்

”என்னைப் பார்த்து சிரித்தார்” OPS முதல்வர் பதவியே போச்சு – முக.ஸ்டாலின் …!!

ஓ. பன்னீர்செல்வம் என்னைப் பார்த்து சிரித்ததால்தான் அவருக்கு முதலமைச்சர் பதவி பறிபோனது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.இதையடுத்து அவர் பரப்புரையில் பேசியதாவது, “முதலமைச்சர் மனுக்களை வாங்கி ஒன்றும் செய்யவில்லை. எனவேதான் நான் மக்களிடம் மனுக்களை வாங்குகின்றேன். நாங்கள் அதிகாரத்தில் இல்லை, ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் உறுதியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதிமுகவினர் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றவே உழைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி விபத்தினால் முதலமைச்சரானார். ஜெயலலிதாதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓ. பன்னீர்செல்வம் என்னைப் பார்த்து சிரித்ததால் அவருக்கு முதலமைச்சர் பதவி பறிபோனது. எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் தவழ்ந்து பதவியை பெற்றார். அதை காப்பாற்ற தற்போது பாஜக காலில் விழுகிறார்.அனைத்து திட்டங்களிலும் கொள்ளையடிக்கும் ஆட்சிதான் அதிமுக ஆட்சி. பதவிபோனதும் அவர்கள் சிறை செல்வது உறுதி. அதுமட்டுமின்றி எந்த மாநிலத்திலும் முதலமைச்சர் மரணத்தில் மர்மம் இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் நிலை என்ன?திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்புடையவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்றார்

Categories

Tech |