Categories
மாநில செய்திகள்

“OPS-EPS கடிதத்தை நான் இன்னும் படிக்கவில்லை”…. சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது.‌ இந்நிலையில் பேரவை தலைவர் அப்பாவுக்கு ஓ. பன்னீர்செல்வம் சார்பில் நேற்று கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக நானே நீடிக்கிறேன். அதிமுகவின் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக ஏதாவது கடிதம் அளிக்கப்பட்டால், அது குறித்து எனது கருத்தை கேட்காமல் என்ன நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. அதனால் எந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அதில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து எடப்பாடி கே. பழனிசாமியும் அதிமுக துணை கொறடா ரவி மூலம் ஒரு கடிதத்தை பேரவை தலைவர் அப்பாவுக்கு நேற்று அளித்தார். அந்த கடிதத்தில், அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு விட்டார் என அதனால் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் உள்ள அவருக்கு பதில் ஆர். உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளார்.

அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் அழுவல் கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு தலைவரிடம் இரு தரப்பினம் கடிதம் அளிக்கப்பட்டது. தற்போது பேரவை கூட்டம் தொடங்க உள்ள நிலையில் மீண்டும் இருவரும் கடிதம் கொடுத்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கடிதத்தை இன்னும் படிக்கவில்லை. படித்த பிறகு நியாயமான முறையில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டப்பேரவில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, துணைத் தலைவரான ஓ.பன்னீர்செல்வம் முன்வரிசையில் அருகிலேயே அமர்ந்திருப்பார். தற்போது இருவரும் பிரிந்து செயல்பட்டு வருகின்ற நிலையில் அதிமுகவின் சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பன்னீர்செல்வம் அமர்ந்து விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்து வருகிறார். மேலும் தங்களின் கோரிக்கை பேரவை தலைவர் ஏற்கப்படாவிட்டால் பேரவை கூட்டத்தை புறக்கணிக்கலாம் என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்து வருகிறார்.

Categories

Tech |