Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் – நச்சுன்னு பதில் சொன்ன ஈபிஎஸ் …!!

நேற்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே .பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக பேனர்ல ஓபிஎஸ் உடைய படம் இருக்கு. அதை ஏன் இன்னும் அகற்றமா வச்சு இருக்கீங்க ?  என்ற கேள்விக்கு, இன்னைக்கு தாங்க நாங்க வந்தோம். நேற்று வரைக்கும் சிபிசிஐடி இங்கு வந்து என்னென்ன பொருள் சேதமாய் இருக்கிறது என்று பார்த்தார்கள். தடயங்கள் எல்லாம் அழிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நேற்று வரைக்கும் நாங்கள் வரவில்லை.

அந்த பொருள் எல்லாம் அப்படியே தான் இருக்கு. எதையுமே நாங்க வந்து கை தொடல, நேற்றைய தினம் சிபிசிஐடி  போலீசார் வந்து, தடயங்களை எல்லாம் ஆய்வு செய்து இருக்கிறார்கள். இனிமேல் அது அகற்றப்படும். முழுமையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எழுச்சியோடு சிறப்போடு செயல்படும். நீதிமன்ற தீர்ப்பை மதித்து நாங்கள் யாரும் வரவில்லை. அதோடு நாங்கள் வந்தால் தடையத்தை அழித்து விடுவாங்க என்று ஏதாவது பிரச்சினை வந்துடும் என்று பொய்யான செய்தியை வெளியிட்டுவாங்க என்று சொல்லித்தான்,

யாருமே தலைமை கழக பக்கம் வரவில்லை. இப்பொழுது சிபிசிஐடி வந்து இங்கு  இருக்கின்ற பொருட்களை எல்லாம் பார்த்துட்டு போயிருக்காங்க, தடையங்களை பார்த்துட்டு போயிருக்காங்க. இதன்  விசாரணை நடந்து கொண்டு இருக்கின்றது. அதை கருத்தில் கொண்டு தான் நாங்கள் யாரும் வரல என தெரிவித்தார்.

Categories

Tech |