செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் எந்த நேரமும் தலைமை கழகத்திற்கு வருவார் என்று ஒரு செய்தியை கேட்டு, ஒரு மனு கொடுத்தோம். அந்த மனு ஓபிஎஸ் அண்ணனுக்கு பாதுகாப்பு கேட்டு வரவில்லை நாங்கள், ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு வருவதால் அங்கு இருக்கின்ற தொண்டர்களெல்லாம் கூடுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.
அதனால் அவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு, போலீஸ் பாதுகாப்பு கேட்டு தான் கடிதம் கொடுத்தோம். வரும்போது கூட ஜெயக்குமார் கொடுத்த பேட்டியை பார்த்தேன். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது ஐயாவை பற்றி பேசுவதற்கு ? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பது போய்க்கொண்டு தான் இருக்கிறது. இன்றை வரைக்கும் கட்சியை பாதுகாக்க வேண்டியது அவருடைய கடமை, கட்சி அலுவலகத்தை பாதுகாக்க வேண்டியது அவருடைய கடமை.
அதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் அவர் கட்சி அலுவலகத்தை பார்வையிட வருவார், அதற்காக பாதுகாப்பு கேட்டோம். ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வரக்கூடாது என சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு ? இவர்களுக்கு தைரியம் இருந்தா நாளைக்கு பொதுக்குழுவில் தேதியை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். நிரந்தர பொதுச் செயலாளர் தானே அதை அறிவிக்க சொல்லுங்கள் தைரியம் இருந்தால், ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது ? என கேள்வி எழுப்பினார்.