தமிழக துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவ பரிசோதனைக்காக சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கபட்டார். இது வழக்கமான பரிசோதனை என்றே மருத்துவமனை தரப்பிலும், துணை முதல்வர் தரப்பிலும் சொள்ளபட்டது. அதுமட்டுமல்லாமல் அவர் இன்று மாலை 2 மணிக்கு அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று விசாரித்தார்.
இதில் துணை முதல்வருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் முதல்வர் கேட்டறிந்ததாக சொல்லப்படுகின்றது. இவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனிருந்தார். முதல்வர் வருகையையொட்டி மருத்துவமனை சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்னர்.