கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 MLA தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு விசாரணை மீண்டும் வந்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் மீது துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கொறடா உத்தரவு மீறி அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அரசுக்கு எதிராக வாக்களித்த பின்னர் இந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யவில்லை. மாறாக அவர்கள் 11 பேரும் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆகினர்.
இதனிடையே தான் திமுக சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி , அரசுக்கு எதிராக வாக்களித்த 11 பேரை தகுதி நீக்கம் செய்யவேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தாலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு பெற்று விட்டதால் இந்த வழக்ககின் விசாரணை நடைபெறாமல் கிடப்பில் கிடந்தது. இதையடுத்து திமுக சார்பில் தொடர்ச்சியாக தலைமை நீதிபதியிடம் முறையிடபட்டது.இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக_வின் கோரிக்கையை ஏற்று இதன் விசாரணையை மீண்டும் உச்சநீதிமன்றம் எடுக்கின்றது.
வருகின்ற 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக தரப்பினர் கலக்கம் அடைந்துள்ளனர். இதில் திமுகவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஆளும் அதிமுக_வின் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதால் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை இந்த வழக்கு ஏற்படுத்த இருக்கின்றது.