மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நலம் விசாரித்தார்.
சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும், இது வழக்கமான சிகிச்சை தான் என்று சொல்லப்பட்டது. இதையடுத்து இன்று முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இதையடுத்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மருத்துவமனை தரப்பிலிருந்து வெளியிடபட்டுள்ள செய்திக்குறிப்பில் துணைமுதல்வர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் தெலுங்கானாவில் தமிழிசை. துணை முதல்வர் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் ஓபிஎஸ்ஸிடம் தமிழிசை கூறினார்.