Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்-ஸின் தோரணை பேச்சு… திடீரென வந்த சந்தேகம்… 1வினாடி யோசிச்சு இருக்காமல்ல… வெட்கப்பட்ட ”பெரும் தலைகள்” ..!!

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது,  அண்ணா திமுக ஒரே தரப்பு தான், ஓபிஎஸ்  அழைப்பு கொடுத்ததற்கு ஒரு தெளிவான பதிலை சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். மரியாதைக்குரிய அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் அனைவரும் வாருங்கள், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லபடியாக இருக்கட்டும் என்ற தோரணையில் அவர் அழைத்திருக்கிறார்.

கருத்துக்கள் பரிமாற்றம்:

அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம், கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இருவரும் கையெழுத்திட்டு அந்த பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றுதான் அனைத்து பொது குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பினார். அப்படி அனுப்பப்பட்ட பொதுக்குழு நடப்பதற்கு முன்பாக மாவட்ட செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

சந்தேகம்:

அப்படி பரிமாறி கொள்ளப்பட்ட பல்வேறு கருத்துகளில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்தும் அதில் உள்ளடங்கி இருக்கிறது. அப்படி மாவட்ட செயலாளர்கள் கருத்துக்கள் அப்படி இருக்கின்ற பட்சத்தில், வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பொதுக்குழுவில் நாம் விவாதித்துக் கொள்ளலாம் என்று இருந்த நிலையில், இதற்கு இடையிலேயே அவருக்கு ஒரு சந்தேகம் வந்து, பல்வேறு வகையிலேயே அவர் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு:

நீதிமன்றத்திற்கு சென்றார், ஒரு கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் கட்சியினுடைய நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவெடுக்க முடியாமல், நீதிமன்றத்திற்கு சென்று அவர் ஒரு மூன்றாவது மனிதரைப் போலவும், மற்ற அனைத்து கட்சியினுடைய நிர்வாகிகளை எதிரிகளைப் போலவும் பாவித்து,  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கலவரம் நடக்கும்:

அதைத்தொடர்ந்து பொதுக்குழு நடக்கக்கூடாது என்பதற்காக கலவரம் ஏற்படும் என்று கூறி காவல் துறைக்கு அவர் மனு கொடுக்கிறார், அதற்கும் மேல் ஒருபடியாக சென்று பொதுக்குழு நடக்கின்ற இடத்திற்கு உரிய உரிமையாளர்களுக்கு பெரிய அளவிலே கலவரம் ஏற்படும். அதனால் நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது என்று சொன்னார். இவையெல்லாம் செய்து முடித்து விட்ட பின்பு,  பொதுக்குழுக்கும் வருகிறார். பொதுக்குழுவிக்கும் வந்த உடனே,

மேடையில் பார்த்தார்:

ஏற்கனவே தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் ஒரு முடிவான சிந்தனை உடன் அமர்ந்திருக்கின்ற போது, அவர் என்ன எதிர்பார்த்தார்களோ, அந்த தீர்மானம் வராத காரணத்தினால், அந்த தீர்மானம் வராததால்  மற்ற எந்த தீர்மானங்களும் நீங்கள் இங்கே வாசிக்க கூடாது,  நிராகரிக்கப்படுகிறது என்று ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களும் கூறுகிறார்கள். அதையும் அவர் மேடையிலே இருந்து பார்த்துவிட்டு தான் செல்கிறார்.

தீர்ப்பு:

அவர் மேடையிலே அமர்ந்திருந்த போது, 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது, அவர் மேடையில் அமர்ந்திருக்கிறார். அறிவிக்கப்பட்ட பின்பு தான் அவர் வெளியில் செல்கிறார். 11-ம் தேதி நடைபெறுகிறது என்று சொன்ன பின்பு,  பொதுக்குழு இவர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு மீண்டும் பொது குழுவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார், நீதிமன்றம் 9.15மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. பொதுக்குழு நடத்துவதற்கு எந்த விதமான தடையும் இல்லை, பொதுக்குழு  நடத்திக் கொள்ளுங்கள் என்று நீதிமன்றம் சொல்கின்றது.

ஓபிஎஸ் வரவில்லை:

ஒரு கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் எங்கு வந்திருக்க வேண்டும் ?  நீங்கள் நீதிமன்றத்திற்கு செல்கின்றீர்கள். நீதிமன்றத்திற்கு சென்று எடப்பாடி தரப்பு  தயவுசெய்து போல் சித்தரிக்க முயற்சி செய்கிறீர்கள். நீதிமன்றம் உங்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறி,  நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. 11ஆம் தேதி ஓபிஎஸ் அங்கே வரவில்லை.

தியாகம் செய்யல:

செயற்குழுவில் ஓபிஎஸ்சுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, பொதுக்குழுவிலும்  அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.பொதுக்குழுவிற்கு வராமல் ஒருங்கிணைப்பாளர் இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனாக இருந்தவர், இந்த இயக்கத்திற்கு எந்த விதமான தியாகமும் செய்யாதவர், ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது, சட்டமன்ற உறுப்பினராகிறார். சட்டமன்ற உறுப்பினர் ஆன உடனே, வருவாய் துறை அமைச்சராகிறார். வருவாய்துறை அமைச்சர் ஆகி பல்வேறு சூழ்நிலையின் காரணமாக புரட்சித்தலைவி அம்மா அவர்களே முதலமைச்சர் ஆக்குகிறார்கள்.

ஓபிஎஸ்_ஸை அழகு பார்த்தாங்க;

இரண்டு, மூன்று முறை முதலமைச்சராகிறார். இவ்வளவு பெரிய உயர்ந்த இடத்திற்கு வந்து அதற்கு மேலும் புரட்சித்தலைவி அம்மா மறைவுக்கு பின்பாக பல்வேறு சூழ்நிலையில் இணைந்த பிறகும் ஒருங்கிணைப்பாளர் என்ற அந்தஸ்தை கொடுத்து, அந்த தலைமை பொறுப்பில் அவரை அமர வைத்து, ஒவ்வொரு தொண்டனும் அழகு பார்த்திருந்த,  அந்த மரியாதைக்குரிய ஓ பன்னீர்செல்வம் அவர்கள், 11ஆம் தேதி பொதுக்குழுவிற்கு வராமல் தலைமை கழகத்திற்கு செல்கிறார்.

அண்ணா திமுக வேஷ்டி:

தலைமை கழகத்திற்கு சென்ற அவர்,  அங்கே இருந்த மற்றவர்கள் எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு, தன்னோடு கழகத் தொண்டர்களை அவர் அழைத்துச் சென்றிருந்தால் நிச்சயமாக அவர்கள் அண்ணா திமுக வேஷ்டி கட்டி உணர்வு உள்ள தொண்டர்களை அழைத்து சென்று இருந்தால், அந்த தலைமை கழகத்தில் ஒரு சிறு மாசு கூட ஏற்படாமல் பார்த்துவிட்டு வந்திருப்பார். ஏனென்று சொன்னால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழகம் என்பது அதிமுகவினுடைய கோவில், நாங்கள் தெய்வங்களாக வணங்கக்கூடிய புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அங்கே அமர்ந்து 50 வருடம் பரிபாரணம் செய்த இடம்.

ரவுடிகளை அழைத்துக்கொண்டு:

அங்கேதான் கட்சியும் வளர்த்தார்கள், அங்கேதான் மக்களுடைய செல்வாக்கோடு முதலமைச்சர் என்ற அந்தஸ்தை பெற்று இந்த தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டுவதற்குரிய இடமாக அந்த தலைமை கழகம் இருந்தது.அந்த தலைமை கழகத்தில் ரவுடிகளை அழைத்து சென்று, அங்கு இருக்கின்ற கதவுகளை உடைக்கிறார்கள், புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் இருந்த இடத்தை உடைக்கிறார்கள்.

பின்னடைவு:

இவர் உண்மையாகவே இந்த கட்சியில் விசுவாசமாக இருந்திருந்தால், இந்த கட்சியால் இவ்வளவு பெரிய உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறோமே இந்த தவறை நாம் செய்யலாமா என்று ஒரு வினாடி நினைத்திருந்தால் வெளியே வந்திருப்பார்.எல்லாம் உடைத்து விட்டு அங்கு இருக்கின்ற பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நபர்,  ஏதோ ஒரு சூழ்நிலையில்,  எந்த விதமான பின்னடைவும் எங்களுக்கு இல்லை,  நீதிமன்றம் 23ம் தேதிக்கு முன்பாக நிலையில் இருக்கிறது என்று சொன்னார்கள் அவ்வளவுதான், வேறு விதமான எந்த கருத்தும் சொல்லவில்லை.

வெட்கப்படுறோம்:

ஆனால் எங்களை அழைக்கிறார். அதனால் தான் கூறுகிறேன், அவர் எங்களை அழைப்பதற்கு தார்மீக உரிமையை இழக்கிறார். இந்த இயக்கத்தில் இருப்பதற்கே ஒரு எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நபராக இருக்கிறார், அப்படிப்பட்டவரை விமர்சனம் செய்வதைக் கூட நாங்கள் வெட்கப்படுகிறோம் என விமர்சித்தார்

Categories

Tech |