அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இன்றைக்கு வேண்டுமானால் ஒரு 2500, 3000 பேர் பொறுப்பில் இருந்து கொண்டு இன்றைக்கு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் வருங்காலம்… ஏனென்றால் அவர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள், அம்மாவின் பாதையில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறார்கள்.
புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்ட திட்டங்களையே மீறி விட்டார்கள். என்னிடம் நேர்கானலில் ஒருவர் கேட்டார், இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ? சில செய்திகள் நான் சொன்னது.. என்ன அர்த்தத்தில் சொன்னேனோ, அதை அவர்கள் புரிந்து கொண்ட விதமாகவும் சில பத்திரிக்கை பேட்டிகள் வேறு விதமாக வந்திருக்கிறது, அது அவர்களின் நோக்கம் அல்ல, அவர்கள் அப்படி புரிந்து கொண்டார்கள்.
நீங்கள் ஒருவேளை வருங்காலத்தில் இணைய வேண்டும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமியா? பன்னீர்செல்வமா? என்று கேட்டார்கள். அதற்கு நான் கூறினேன் தேர்தல் கூட்டணி என்பது வேறு, ஒருவருடன் இணைவது என்பது வேறு. அதற்கு பன்னீர்செல்வம் அவர் தனக்கு பதவி இல்லை பிடுங்கி விட்டார்கள் என்ற கோபத்திலே அன்றைக்கு அவர் செயல்பட்டு, அம்மாவின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்து, அதற்குப் பிறகு தவறை உணர்ந்து,
குடும்பத்தின் பிடியிலே இந்த இயக்கம் இருக்கிறது என்று சொன்னதெல்லாம், தான் தவறாக செய்து விட்டோம் என்பதை உணர்ந்து, அதுபோல அம்மாவின் மரணத்திலே சின்னமா தான் காரணம் என்று பரப்பியவர்கள் அதை உணர்ந்து, எனக்கு அந்த சந்தேகம் இல்லை, ஆனால் பொது மக்களுக்கு இருக்கிறது என்றெல்லாம் தனது தவறை உணர்ந்து அதிலிருந்து மாறி வந்து விட்டார்.
ஆனால் பழனிச்சாமி இன்னும் மாறவே இல்லை, மேலும் மேலும் துரோகங்களை செய்து கொண்டிருக்கிறார். முதலாக மேடையிலே நாலு கால் பிராணி போல தவழ்ந்து வந்து முதலமைச்சர் பதவி கொடுத்த, நமது சின்னம்மா அவர்களுக்கு துரோகம் செய்தார்,
அந்த ஆட்சி நிலைக்க பாடுபட்ட நமக்கு எல்லாம் துரோகம் செய்தார், அவர் தவறான நடைமுறையில் செல்கிறார் என்று, முதல்வராக தொடரக்கூடாது என்று கவர்னரிடம் மனு கொடுத்த 18 எம்எல்ஏக்களுக்கு அவர் துரோகம் செய்தார், அந்த ஆட்சி போய்விடுமோ என்ற நேரத்தில் மீண்டும் கை கொடுத்த பன்னீர் செல்வத்திற்கும் துரோகம் செய்தார் என விமர்சித்தார்.