அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், தமிழகத்தில் திமுகவினர், அரசு அதிகாரிகளை தாக்கியதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சென்னை அடையாரில் இருக்கும் மாநகராட்சி அலுவலகத்தில், நாங்கள் சொல்லக்கூடிய நபர்களை தான் களப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டினார்கள்.
தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களில், டோக்கன் விநியோகிப்பதில், நியாயவிலை கடைகளில் என்று அனைத்திலும் திமுகவினரின் ஆதிக்கம் தான் ஓங்கி நிற்கிறது. மணப்பாறைக்கு அருகில் முத்தப்புடையான்பட்டியில் மணலை கடத்தி சென்ற லாரிகளை கைப்பற்றிய அதிகாரிகளை மிரட்டி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், இதனைப் பார்த்தால், அரசுப்பணிகளில் கட்சிகள் தலையிடக் கூடாது என்று கூறிய அண்ணாவின் கூற்றிற்கு, முற்றிலுமாக முரண்பட்ட ஆட்சி, மக்களின் விரோத ஆட்சி, ஜனநாயகத்திற்கு புறம்பாக உள்ள ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது என்று தெளிவாக தெரிகிறது என்று கூறியிருக்கிறார்.
மேலும், திமுகவினர் அரசாங்க அதிகாரிகளை தாக்குவது மற்றும் மிரட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதனை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய பொறுப்பை தன்னிடம் வைத்துள்ள முதல்வர், இதில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.