Categories
அரசியல்

“உங்க ஆளுங்க அட்டூழியம் தாங்க முடியல”…. கொஞ்சம் சொல்லி வையுங்க…. முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுத்த ஓபிஎஸ்….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேலூர் சார் ஆய்வாளர் சீனிவாசன் தற்கொலை மிரட்டல் விடுத்ததற்கு முதலமைச்சரிடம் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் திமுக ஆட்சியில், அனைத்து தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வேப்பங்குளம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக இருக்கும் சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது, “வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறேன். திமுகவினர், ஏல சீட்டு மோசடி மற்றும் மணல் கடத்துவதற்கு வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று என்னை மிரட்டுகிறார்கள்.

மேலும், திமுக பிரமுகர்கள் சிலர் தனக்கு தொந்தரவு கொடுப்பதால், மனஉளைச்சலில் இருக்கிறேன். திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை பொறுக்க முடியவில்லை. நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

ஒரு காவல் சார் ஆய்வாளருக்கு இந்த நிலைமை ஏற்பட்டால், மற்றவர்களின் நிலையை எண்ணிப் பார்க்கவே பயமாக உள்ளது. குற்றங்களை தடுக்க காவல்துறையினர் போராடுகிறார்கள். அவர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகளை குற்றம் செய்ய, திமுக அரசு தூண்டுகிறது.

சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வரின் துறையிலேயே இவ்வாறான அட்டூழியங்கள் நிகழ்கிறது எனில், பிற துறைகளைப் பற்றி கேட்கவே தேவையில்லை. “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போன்று, இதனை போல் எத்தனை அதிகாரிகளை மிரட்டி இருக்கிறார்களோ? அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். திமுகவினரின் இது போன்ற அட்டூழியங்களை கடுமையாக எதிர்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |