Categories
அரசியல்

துப்பாக்கிசூடும் மையங்களால்… மக்களுக்கு ஆபத்து… தமிழக அரசு கடமையை செய்யவேண்டும்…. -ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!

துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் விபரீதம் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்று அ.தி.மு.க வலியுறுத்தியிருக்கிறது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குறிப்பிட்டிருப்பதாவது, 30-12-2021 ஆம் தேதியன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் நார்த்தாமலை அருகில் பசுமலைப்பட்டியில் இருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சியின் போது மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரின், துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு, 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்த வீட்டில் இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் பாய்ந்தது.

அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் ஈச்சங்காடு கிராமத்தில் உள்ள சுப்பிரமணியன் என்ற விவசாயி, தன் வீட்டின் பின்பக்கத்தில் மலைப்பகுதியில் துப்பாக்கி சூடு பயிற்சி மையம் இருப்பதாகவும், இரு தினங்களுக்கு முன் வீட்டின் கூரை பகுதியில் ஏதோ சத்தம் கேட்டதாகவும், அங்கு துப்பாக்கி குண்டு கிடந்ததாகவும் கூறியதாக செய்தி வெளியானது.

தமிழகத்தில் இருக்கும் துப்பாக்கி சுடும் மையங்கள் அனைத்திலும் தகுந்த பாதுகாப்பு செயல்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு உண்டாக்குவதற்கான நிலை இல்லையெனில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவது ரத்து செய்யப்பட வேண்டும். இனிமேல் துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் விபரீதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடமை,  தமிழக அரசிற்கு இருக்கிறது.

இதனால் தமிழக முதல்வர் இதற்காக தனி கவனம் செலுத்தி தமிழகத்தில் இருக்கும் துப்பாக்கி சுடும் மையங்கள் அனைத்திலும் மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல், பாதுகாப்புடன் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யவும், அதன்படி பயிற்சி செய்ய தகுந்த அனுமதி அளிப்பதற்கும், ஆய்வின் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தால் துப்பாக்கி சுடும் மையத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |