Categories
அரசியல் மாநில செய்திகள்

மெதுவா எட்டி பார்த்த ஓபிஎஸ்…! அப்படியே வலைக்குள்ள போய்ட்டாரு… கவலை இல்லாதADMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவங்க நாலு பேர் போறாங்க,  இரண்டு பேர் போறாங்க. அத பத்தி எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை கிளை கழகத்திலிருந்து தலைமை நிர்வாகிகள் வரை  எல்லாரும் ஒற்றுமையாக இருந்து,  கழகத்தை பொருத்தவரை ஒரு சிறப்பான முறையில் வழிநடத்தப்படுகிறது.

எல்லாரும் சேர்ந்து அண்ணா பொதுக்கூட்டம்,  கண்டன ஆர்ப்பாட்டம் பண்ணுனோம். அதே போல கட்சி ஆரம்பித்து பொன்விழா ஆண்டு முடிந்து,  51 வது வருஷம். தமிழ்நாடு முழுவதும் கூட்டம் போட்டோம். சசிகலா, ஓபிஎஸ் எதாவது பெரிய அளவில் கூட்டம் போட்டாங்களா ?  அண்ணா பிறந்தநாள் கூட்டம். இல்ல கட்சி ஆரம்பித்த நாளில் பெரிய அளவில் கூட்டம் போட்டாங்களா ? கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துனாங்களா? இப்பதான் கொஞ்சம் வாய் திறந்து இருக்காரு.

அதாவது தீவிரவாதம் தலை தூக்கிருச்சு என.. அதுவும் மெதுவாக வலையில் இருந்து, எட்டி பார்த்துட்டு வளைகுள்ள போயிட்டாரு. அது தான் ஓபிஎஸ். ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் கமிஷன் போடப்பட்டது, அம்மா மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்று…  அவரைப் பொறுத்தவரையில், தெளிவாக சொல்லிவிட்டார். விஜயபாஸ்கரை பொருத்தவரை அவர் நிலையை சொல்லிட்டாரு.என்னுடைய நிலை ஒரு பங்கும் இல்லை,  எல்லாமே திருமதி சசிகலாவும்,  திரு ஓபிஎஸ் எல்லாமே அவர்தான் என தெரிவித்தார்.

Categories

Tech |