Categories
மாநில செய்திகள்

ரெடியா இருந்த ஓபிஎஸ்…! எல்லாமே அவருக்கு தெரியும்: புதிய பரபரப்பு!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவிற்கு வெஜிடென்ஷன்,  குடல் நோய்க்குறி உபாதைகள் குறித்து மருத்து அறிக்கைகளின் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தயார் நிலையில் இருந்து ஓபிஎஸ் முதல்வராக பதவி வகித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை அனைத்தையும் முழுமையாக அறிந்திருந்தார் பன்னீர்செல்வம் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பதவி இழந்ததால் தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கோரி இருந்தார் என்றும், டாக்டர் பாபு ஆபிரகாம் மீது  ஆறுமுகசாமி ஆணையம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லண்டன் டாக்டர் ரிச்சட் பீலே கூறியதை திரித்துக் கூறி, டாக்டர் பாபு ஆபிரகாம் தந்திரம் செய்ததாகவும்,  ஆணையத்தின் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.  அமெரிக்க டாக்டர் சமீன் சர்மா கருத்தை ஏற்று இருதய அறுவை சிகிச்சை செய்திருந்தால், ஜெயலலிதாவை காப்பாற்று இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு அதிர்ச்சியான உண்மை தகவல்கள் தற்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

Categories

Tech |