ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது வரவேற்கத் தகுந்த தீர்ப்பு. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒன்ற கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க, ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை உயர்நீதிமன்றம் இன்றைக்கு வழங்கி இருக்கின்றது.அதிலே தீர்ப்பிலே இரண்டு முக்கியமான விஷயங்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
ஜூலை 11ஆம் தேதி அன்று கூட்டப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொது குழு சட்டப்படி செல்லும். அதோடு தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகின்றது என்கின்ற இந்த இரண்டு கருத்துகளும் தீர்ப்பில் உள்ளது. எனவே ஒவ்வொரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியோடு இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகின்றனர்.
கழக சட்ட திட்ட விதிகளின்படி கூட்டப்பட்ட இந்த பொதுக்குழு செல்லும் என்கின்ற தீர்ப்பினை வரவேற்கும் விதமாக இன்னைக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சகோதரர்கள் எழுச்சியோடு இந்த தீர்ப்பினை கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இந்த தீர்ப்பினை நாம் உற்று நோக்கும்போது நம்முடைய மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கின்ற அங்கீகாரத்தை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் ஒற்றை தலைமை என்கின்ற அந்த ஒரு அங்கீகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கின்றது என்பது ஒரு நல்ல மகிழ்ச்சியான, வரவேற்க தகுந்த நல்ல தீர்ப்பாகும். 11ஆம் தேதியன்று நடைபெற்ற பொதுக்குழு சட்டப்படியாக நடைபெற்றது என்கின்ற வகையிலே நீதிமன்றம் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும்போது திரு ஓபிஎஸ் நீக்கம் செல்லும் என தெரிவித்தார்.