அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனிடையே பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கபட்டனர். ஆனலும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறிவரும் ஓபிஎஸ் அணியினர், நீதிமன்றத்தில் வழக்கு என சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது தங்கள் அணியின் நகர்வுகளை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேசுவதற்கு நிறையா இருக்கு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால் உறுதியாக எந்த நோக்கத்தோடு இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கினார்களோ, புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்களோ அந்த எண்ணம் உறுதியாக நிறைவேறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.