Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையை மறைத்த ஓபிஎஸ் – நீதிமன்றத்தில் பகீர் …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு தொடர்பான நான்கு கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை தொடர்ந்தார்.

அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை  தேர்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை  கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக சட்ட விதிப்படி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ள நிலையில், தடைகேட்டு தொடர்பட்ட மனுவை மீண்டும் அனுமதிக்கக்கூடாது  என கேட்டுக் கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டிருந்த நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தற்போது உள்ளதா ? பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எத்தனை நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட வேண்டும். பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா ?

பொதுக்குழு நோட்டீஸில் கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு உள்ளது ? என நான்கு கேள்விகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு முன் வைத்தனர். இதற்கு விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இன்றைய விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்னவாக இருக்கும் ? என்று எதிர்பார்ப்பு எழுந்து இருந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஓபிஎஸ்-க்கு கட்சி நளனில் அக்கறை இல்லை. கட்சி நலனுக்காக ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு தடை கேட்கவில்லை. முன்னுக்கு பின் முரணாக பேசும் ஓபிஎஸ் மனுவை அபராதத்துடன்  தள்ளுபடி செய்ய வேண்டும். கட்சி நிர்வாகத்தில் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஓபிஎஸ் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. பல உண்மைகளை மறைத்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளதாக தலைமை கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |