Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் ADMK ஆபீஸ் போவார்…! எல்லா தொண்டர்களும் வாறாங்க… பரபரப்பை கிளப்பிய OPS கோஷ்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை, நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கின்ற காரணத்தினால் நீதிமன்றத்தினுடைய தீர்ப்புகள் முறையாக இறுதி கட்ட தீர்ப்பு வந்த பிறகு,  கட்சி அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நிச்சயம் செல்வார். அவர் பொருளாளர் எல்லா வங்கிகளையும் இவர்கள் என்ன சொன்னார்கள் போன மாதம் ?

எல்லாம் வங்கிகளிலும் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக போட்டோம் என்று கடிதம் கொடுத்து விட்டோம் என்று சொன்னார்கள். அதற்கு நாங்கள் பதில் சொன்னேன். ரிசர்வ் பேங்கில் 2011ல் இருந்து 16 வரை நியமன இயக்குனராக இருந்தவன். அதனால் rbi கடிதம் போட்டு பொருளாளர் என்பது தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தான் இருக்கிறார், வேறு யாரும் கிடையாது. எந்த சூழ்நிலையிலும் இதுபோல் வங்கியில் கணக்கு வழக்குகளை நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று சொன்னோம்.

உடனே எல்லா வங்கிகளுக்கும் நிறுத்தி விட்டார்கள், இன்றைக்கு அந்த வங்கிகள் இருக்கின்ற பணம் 270 கோடி ரூபாயும் எல்லா வங்கிகளிலும் இருக்கின்ற ஆறு கோடி, எழுகோடி என நிறை பணம் இருக்கிறது, அந்த பணங்கள் எல்லாம் பாதுகாத்தது ஓபிஎஸ் தான்.இல்லையென்றால் அவர்களை எடுத்து இருப்பார்கள்.

அதனால் 14 வருடமாக பொருளாளர் நியமித்த ஓபிஎஸ் அவர்கள் இப்போதும் பொருளாக இருக்கிறார், நீதிமன்றமும் கூறியிருக்கிறது. அதனால் கட்சி தலைவரும் அவர் தான், பொருளாளரும் அவர்தான், இவர்கள் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எல்லா தொண்டர்களும் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |