Categories
அரசியல் மாநில செய்திகள்

100பேரை வச்சு இருக்கும் ஓபிஎஸ் …! தீர்ப்பில் எந்த பின்னடைவும் இல்லை… அதிரடி காட்டிய கேபி முனுசாமி

நேற்று அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பேசிய கேபி முனுசாமி,   கடந்த 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவிலும் கொண்டு வந்த தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் முழுமனதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரு 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

நீதிமன்றத்தினுடைய முழு தீர்ப்பு வந்த பின்பு அதற்கு முறையாக தலைமை கழகத்தில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். இதில் பின்னடைவு என்பதற்கு எந்த வித கேள்வியும் எழவில்லை. காரணம் 2,600 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் 2,562 பொதுக்குழு உறுப்பினர்கள் திரு மரியாதைக்குரிய, போற்றுதலுக்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் சொல்வார்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் தானே என்று. இந்த குழு உறுப்பினர் தேர்ந்தெடுப்பதே கீழ் மட்டத்திலே இருக்கின்ற கட்சியினுடைய உறுப்பினர்கள் வாயிலாக ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர், மாவட்ட செயலாளர் அந்தந்த தொகுதியின் உடைய பொதுக்குழு உறுப்பினர் என்பது கீழ் நிலையில் உள்ள ஒவ்வொரு கட்சி உறுப்பினர்கள் வாயிலாக தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்ற இந்த பொதுக்குழு உறுப்பினர்கள் தான் கட்சியினுடைய அனைத்து அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அப்படி அனைத்து அதிகாரம் படைத்து இருக்கக்கூடிய பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக, மரியாதைக்குரிய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் அவர்களை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இது பின்னடைவு என்பதற்கு வினா எழவில்லை. நீதியரசர் ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறார். அவர் வேறு ஒன்றும் தவறாக கூட  கொடுக்கவில்லை. 23 ஆவது 23 நடைமுறையில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அது மீண்டும் அவர்களுடைய உத்தரவின் பிறகு  எங்களுடைய கழகத்தினுடைய நிர்வாகிகள் அமர்ந்து எப்படி அதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்கள் ஆய்வு செய்த பின்பு அதை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |