Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்.!!  

இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம்  அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது.

 

Seithi Solai

இதையடுத்து அதிமுக நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நாளை (23ஆம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் , ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று அறிவித்தது.

Image result for அதிமுக தலைமை

 

இந்நிலையில் நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம்  ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. விருப்பமனுக்களை பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 3 மணிக்குள்  தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்றும்,அத்துடன் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு அதிமுக தலைமையகத்தில் நாளை 23 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு அளிக்கும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Categories

Tech |