Categories
மாநில செய்திகள்

விருப்ப ஒய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ்…. அடுத்து அரசியல் பிரவேசம்…??

அதிகாரபூர்வமாக பணியிலிருந்து ஒய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் இன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சகாயம் ஐஏஎஸ் ஓய்வு பெற இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது. இந்நிலையில் இவர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். தற்போது அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், அதிகாரபூர்வமாக சகாயம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிய போது பல ஆயிரம் கோடி கிரானைட் முறைகேட்டினை வெளிக்கொண்டு வந்தவர் ஆவார்.

இதன் காரணமாகவே பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் சகாயம் மக்கள் மேடை என்று ஊழலுக்கு எதிரான அமைப்பையும் நடத்தி வந்தார். ஓய்வுக்குப் பிறகு சகாயம் அரசியலுக்கு வரலாம் என்று பலரும் பேசி வந்தனர். ஆனால் சகாயம் இன்னும் அதை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது ஓய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Categories

Tech |