அமெரிக்காவில் இனி அனைவரும் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ராபிட் எனும் கிட் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரியாவில் உள்ள எழுமி என்ற ஒரு நிறுவனத்திடம் ராபிட் கொரோனா பரிசோதனை கிட்களைகளை ஆர்டர் செய்ய உள்ளது. முதற்கட்டமாக 8.5 மில்லியன் கிட்களை ஆர்டர் செய்ய உள்ளது. இதற்காக 231.8 மில்லியன் டாலரை அமெரிக்கா செலவழிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை தயாரிக்க அமெரிக்காவிலேயே ஒரு புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
அதன் மூலம் தயாரிக்கப்படும் சோதனை கிட்கள் அரசிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் தயாரிப்பு தொடங்கிய ஒரே மாதத்தில் 19 மில்லியன் கிட்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கிட்கள் இந்த ஆண்டே மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே 15 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இதனால் சோதனை மையங்களில் கூட்டம் குறைய வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த கிட்டின் விலை 30 டாலர் நிர்ணயிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாமானிய மக்களுக்கு இது அதிக தொகை என்று பலர் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் வீட்டிலேயே பலர் சோதனை செய்து கொண்டால்,பாதிப்புகளின் எண்ணிக்கையை சரியாக அளவிட முடியாது என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.