Categories
கோயம்புத்தூர் நீலகிரி மாநில செய்திகள்

“நீடிக்கும் கனமழை” நீலகிரி , கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்.. அச்சத்தில் பொதுமக்கள்..!!

அழகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம் முக்கூர்த்தி தேசியப் பூங்கா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட இடங்களில்  பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. தொடர் மழையால் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பவானி மற்றும் மாயாறு ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Image result for rain orange alert

உதகை வெலிங்டன் ராணுவ மையத்திற்கு குடிநீர் ஆதாரமாக திகழும் ஸ்பெர்ன்  dam அணையின் நீர்மட்டம் 18 அடியிலிருந்து 30 அடியாக உயர்ந்துள்ளது. மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 வட்டங்களில் மூன்றாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து எஸ்டேட் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Categories

Tech |