பழங்களில் மிக குறைவான கலோரிகளை கொண்ட பழம் ஆரஞ்சு பழம். இந்தப் பழத்தின் நன்மைகள் பற்றிய தொகுப்பு.
கமலா ஆரஞ்சு இருக்கக்கூடிய விட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய வேதிப் பொருள் உடலில் வைரஸ் தொற்று வராமல் தடுக்கிறது என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வர அதில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும். கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றது. அதுமட்டுமின்றி ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும்.
இருதயத்தின் இயக்கத்தை சீராக கமலா ஆரஞ்சு பெரிதும் உதவி புரிகிறது. உடலில் பொட்டாசியம் சத்து குறையும் பொழுது தான் இருதயம் தொடர்பான பிரச்சனைகள் ஆரம்பிக்கும். கமலா ஆரஞ்சு பொட்டாசியம் எனும் கனிம சத்து அதிக அளவு கொண்டது. இருதய சுவர்களுக்கு நல்ல வலு கொடுப்பது மட்டுமல்லாமல் இருதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவி புரிகிறது.
கண் தொடர்பான பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவர இதில் இருக்கும் கரோட்டினாய்டுகள் எனும் வேதிப்பொருள் விட்டமின் ஏ சத்தாக மாறி கண் தொடர்பான பிரச்சனைகள் குணமாக்கும்.
அதிக ரத்த அழுத்த பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் இந்த கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர இதில் இருக்கும் மெக்னீசியம் ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவி புரிகிறது.
சிறுநீரக கற்கள் பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வர சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும் மற்றும் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.
கமலா ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வர சூரியக் கதிர்களால் சரும செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும் மற்றும் முதுமை தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.
மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால் கமலா ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். இது மூட்டுகளில் இருக்கும் வீக்கத்தை குறைத்து மூட்டுகளுக்கு நல்ல பலன் கொடுக்கக் கூடியது இந்த கமலா ஆரஞ்சு.