Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு… இனிமேல் 5 நாட்கள் போதும்… குஷியான அரசு ஊழியர்கள் ..!!

தமிழகம் முழுவதும் இனி 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டு மொத்த அலுவலகமும் முடக்கப்பட்டன. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவன முழுவதும் முடக்கப்பட்ட நிலையில் பொருளாதார நலன் கருதி ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டன. தளர்வுகள் அமல் படுத்தப்படும் போது ஏற்கனவே அரசு பணிகள் எல்லாம் தொய்வடைந்த நிலையில் அரசு அலுவலகங்கள் ஆறு நாட்கள் செயல்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

தற்போது 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி வருவதால் அரசு அலுவலகங்கள் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டப்படுள்ளது. சனிக்கிழமை உட்பட ஆறு நாட்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கும் என்பதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |