தமிழகத்தில் பொறியியல் கல்லூரிக்கான மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு கட்டணம் செலுத்த கடைசி நாள் இன்றோடு முடிவடைகின்றது .
கொரோனா பேரிடர் காலங்களில் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டன. ஆனாலும் மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு கல்வி சார்ந்த நடவடிக்கைகளை இணையம் வாயிலாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இணையவழியில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு உள்ளிட்ட விஷயங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் இரண்டாவது சுற்றில் 23 ஆயிரம் பேருக்கு இட ஒதுக்கீடு முடிந்த நிலையில் மூன்றாவது சுற்றுக்கு கட்டணம் செலுத்தும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. மூன்றாவது சுற்றுக்கு நாளை முதல் விருப்பப் பதிவு தொடங்க உள்ளது. 35 ஆயிரம் பேருக்கு 3வது சுற்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு கவுன்சிலிங் வாயிலாக ஒதுக்கீடு மாணவர்கள், அக்டோபர் 22 முதல் 28 தேதிகளில் கல்லூரிகளில் ஆன்லைன் வழியே கட்டணம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.