Categories
தேசிய செய்திகள்

ஆர்டர் பண்ணது மவுத்வாஷ்… ஆனால் கிடைத்ததோ ரெட்மி நோட் 10… மும்பைகாரருக்கு அடிச்சது அதிர்ஷ்டம்….!!

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு ரெட்மி நோட் 10 மொபைல் போன் கிடைத்துள்ளது.

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் 396 மதிப்புள்ள மவுத்வாஷ் ஒன்றை ஆர்டர் செய்தார். அவருக்கு இரண்டு நாட்கள் கழித்து பார்சல் கிடைத்தது. அதை திறந்து பார்த்தபோது மவுத்வாஷ்க்கு பதிலாக 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருப்பதை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் ரிட்டன் செய்யலாம் என்று பார்த்தபோது மவுத்வாஷ் நுகர்வோர்குரிய தயாரிப்பு என்பதால் அதனை ரிட்டன் செய்யமுடியாது என்று குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து அமேசான் நிறுவனத்திற்கு ட்விட்டரில் தெரியப்படுத்தி இருந்தார். அந்த பார்சலில் ஸ்டிக்கர் சரியாக இருப்பதாகவும், அதில் உள்ள கட்டண சீட்டு வேறு ஒருவருடையது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து டுவிட்டரில் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதை கலாய்த்து வருகின்றனர்.

Categories

Tech |