Categories
உலக செய்திகள்

வன்முறையை தூண்ட நினைத்தால்… உடனே நடவடிக்கை எடுங்க… பிரபல நாட்டில் பிரதமர் உத்தரவு..!!

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் மதத்தை கொண்டு வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது துர்கா பூஜா நிகழ்ச்சியின் போது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்ததாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானதோடு 66 வீடுகள் சேதப்படுத்தபட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மத ரீதியாக ஊடகங்களில் தவறான தகவல் பரவியது தான் அந்தக் கலவரத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.

இந்த நிலையில் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தாக்குதலை நடத்திய குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அந்த வகையில் பிரதமர் ஷேக் ஹசீனா, உள்துறை அமைச்சர் அசாதுசமான் கானிடம் மதத்தை பயன்படுத்தி வன்முறையை தூண்ட நினைப்பவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |