Categories
தேசிய செய்திகள்

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு: தப்பிக்குமா ஃபட்னாவிஸ் அரசு?

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது.

இவ்வழக்கில் சிவசேனா சார்பாக கபில் சிபல், மத்திய அரசு சார்பாக அரசு துணை வழக்கறிஞர் துஷார் மேத்தா, தேவேந்திர ஃபட்னாவிஸ் சார்பில் முகுல் ரோத்தகி, காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கில் வாதங்களை விசாரித்த நீதிபதிகள், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவேண்டும் எனவும், நாளை பிற்பகல் 5 மணிக்குள் உறுப்பினர்கள் பதவியேற்றப்பின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இடைக்கால சபாநாயகர் இன்று பிற்பகல் 5 மணிக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |