Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அமைக்கப்பட்ட குழுக்கள்… கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி… தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு…!!

தேசிய பசுமை தீர்ப்பாயம் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சன் குளத்தில் கடந்த 12ஆம் தேதி மாரியம்மன் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பட்டாசு ஆலை குத்தகைதாரர்கள் 2 பேர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியான தப்பியோடிய பட்டாசு ஆலையின் உரிமையாளர் சந்தன மாரியே போலீசார் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |