ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை திருப்பித் தர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1,489ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 414ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 12%, உயிரிழந்தோர் 3% ஆக உள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானம் மற்றும் ரயில் போக்குவதரத்தும் மே 3ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையி ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை திருப்பித் தர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 வாரங்களுக்குள் முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.