Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு ஷாக்…. மக்களே கவனமா இருங்க… உங்களுக்கு 2022ல் தானாம் …!!

சாமானிய மக்களுக்கு 2022-ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பெரும் தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் சாமானிய மக்களுக்கு கொரோனாவுக்ககான தடுப்பூசி 2022-ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார்.

ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க சற்று காலம் ஆகும் என்றும் கூறியுள்ளார். சந்தையிலிருந்து காய்ச்சல் தடுப்பூசி போன்று கொரோனா தடுப்பூசியை எவ்வாறு வாங்க முடியும் என்பதை பார்க்க எங்களுக்கு அவகாசம் தேவைப்படுவதாக டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார். குளிர்பதன கிடங்குகளை பராமரிப்பு தேவையான எண்ணிக்கையில் சிரஞ்சுகள் போதுமான ஊசிகள் உள்ளிட்டவை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் கடைக்கோடி பகுதிக்கும் தங்குதடையின்றி கொரோனா தடுப்பூசியை வழங்குவது மிகப்பெரிய சவாலாகும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |