Categories
மாநில செய்திகள்

சாதாரண தொண்டனை…. முதல்வராக்கும் கட்சி அதிமுக – முதல்வர் எடப்பாடி…!!

சாதாரண தொண்டனின் கதவை தட்டி முதல்வராக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் 30 வருடங்களாக ஆட்சி நடத்திய ஒரே கட்சி அதிமுக தான் என்றும், தமிழகம் அனைத்து துறைகளிலும் சாதனை பெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் அதிமுக அரசு ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அடுத்த வருடம் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சில புல்லுருவிகள் திமுகவை அழிக்க நினைத்தார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் தவிடு பொடியாகி விட்டது.

அதேபோல் அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் கட்சியின். அடிமட்ட தொண்டன் முதல் அமைச்சராக உள்ள ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறியுள்ளார். நான் இன்று முதல்வராக இருக்கலாம் . நாளை ஓபிஎஸ் முதலமைச்சராக இருக்கலாம். ஆனால் நாளை தொண்டர்களில் ஒருவர் கூட முதல்வராக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். சாதாரண தொண்டனின் கதவை தட்டி முதல்வராக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |