தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு , ஒரே ரேசன் திட்டம் அமுலாகும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்றைய விவாதத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசும் போது , தமிழகத்தில் நெல்லை , திருநெல்வேலியில் சோதனையை முறையில் அமுலாகி இருந்த ஒரே நாடு , ஒரே ரேசன் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமுல் படுத்தப்படும் என்று தெரிவித்தார். குடும்ப அட்டை வைத்திருப்போம் எங்கு வேண்டுமெனாலும் ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.