Categories
உலக செய்திகள்

ஒரே குடும்பத்தில் 40 பேருக்கு கொரோனா… இறுதி சடங்கில் பெண் செய்த விபரீதம்..!!!

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிசோனாவில் இருந்து மேற்கு விர்ஜீனியா வரை ஒரு பெண் தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும், முக கவசம் கூட அணியாமல் இறுதி சடங்கு ஒன்றிற்காக சென்றிருக்கிறார். அதுமட்டுமன்றி அவருடைய கணவர் மற்றும் மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதை அவர் மறைத்துள்ளார். இதுபற்றி கொரொனா பாதித்த Polly Williams குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். விமான நிலையத்தில் இருந்து அந்தப் பெண் வரும்போதே மிகவும் சோர்வாக இருந்துள்ளார். அவரைக் கண்ட அந்த குடும்பத்தினர் விமான பயண களைப்பு மற்றும் தூக்கமின்மையால் அவர் அப்படி இருப்பதாக கருதியுள்ளனர். உறவினர்கள் இறுதி சடங்கு நடந்த வீட்டிற்கு அதிக அளவில் துக்கம் விசாரிக்க வந்துள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களில் அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக நிலையிலும் அவர் அந்த உண்மையை சொல்லவில்லை. அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக அந்த பெண்ணின் கணவரிடம் இருந்து Polly குடும்பத்தினருக்கு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியில், அவருக்கும் அவருடைய மகனுக்கும் கொரோனா இருப்பதை கூறியுள்ளார். உடனடியாக மற்றவர்களுக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் அந்தக் குடும்பத்தில் இருந்த ஒரு குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகு குழந்தையிலிருந்து படிப்படியாக குடும்பத்தார் 40 பேருக்கு காட்டுத் தீ போல கொரோனா பரவியுள்ளது. 5மாத இரட்டைக் குழந்தைகள் முதல் 77 வயது பெண்மணி வரை பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் கொரோனாவை பரப்பிய அந்த உறவினர் பெண் மீது குடும்பத்தினர் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அவருக்கு உடல் நலம் சரியில்லை என்பது வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், அவர் அந்த உண்மையை மறைத்து இத்தனை பேருக்கு கஷ்டத்தை அளித்துவிட்டார் என்பதே அவர்களின் கோபம். Pollyக்கும் கொரோனா உறுதியாக நிலையில், அவர் தற்போது ஆனால் அவருடைய தாயின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

Categories

Tech |