ஒரே நாடு ஒரே சட்டத்தின் வரைவு அறிக்கையைத் தயாரிப்புக் குழுவில் 3 தமிழர்களை இணைத்து இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு: இலங்கையில் ஒரே நாடு, ஒரே சட்டம் குறித்த வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் குழுவில் தமிழ் சமூகத்தினர் 3 தமிழர்களை இணைத்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார். இந்த சட்டத்தின் வரைவை உருவாக்க 13 நபர்கள் கொண்ட குழுவை கடந்த மாதத்தில் சிறப்பு அரசாணையின்படி அதிபரான கோத்தபய ராஜபட்ச அமைத்தார். இந்தக் குழுவில் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தினர் ஆன சிங்களர், சிறுபான்மை முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் 3 பேரை இந்த குழுவில் இணைத்து கோத்தபய ராஜபட்ச கடந்த புதன்கிழமை உத்தரவிட்டார். இந்தக் குழுவில் ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஷ்வரி பற்குணராஜா, ஐயம்பிள்ளை தயானந்தராஜா போன்றோர் இலங்கைத் தமிழர்கள் பிரதிநிதிகளாக இடம்பெற்றிருப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளது. இவர்களில் யோகேஷ்வரி பற்குணராஜா தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தின் மேயராக இருக்கின்றார்.
இந்தக் குழுவின் தலைவராக புத்த மதத் தலைவர் கலாகடாத்தி ஞானசாரா உள்ளார். அடுத்த வருடம் பிப்ரவரி 28-ம் தேதி இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க இந்தக் குழு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கையில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற திட்டம் கொண்டுவரப்படும் என்று கடந்து 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது கோத்தபய ராஜபட்ச வாக்குறுதி அளித்திருந்தார். அதன்பின் கடந்த 2019-ல் ஈஸ்டர் தினத்தின்போது இலங்கை தேவாலயங்களில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு ஒரே நாடு, ஒரே சட்டம் கோரிக்கை மேலும் வலுபெற்றது. .