Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோவா…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை… அச்சத்தில் பொதுமக்கள்…!!

அரியலூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் ஏராளமான உயிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் முழு ஊரடங்களில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு நாள் ஒன்றுக்கு 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதில் தற்போது வரை 57 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 5,232 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 4,944 பேர் தொற்றிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் 238 பேர் மருத்துவமனையில் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Categories

Tech |