Categories
மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 47 பேரை கடித்து குதறிய வெறிநாய்…. பெரும் பரபரப்பு….!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் சாலையில் வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தது,  திடீரென அந்த நாய் பொதுமக்களை வெறித்தனமாக கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் அந்த நாயை விரட்டி அடித்தனர். அப்போது பாட்டி குளம்,போர்டின் பேட்டை, ஈஸ்வரன் கோவில் தெரு மற்றும்  பஜார் வீதி ஆகிய  பகுதிகளில் நடந்து சென்ற பொதுமக்களை கடித்தது. இதனால் மொத்தம் 47 நபர்களை அந்த நாய் கடித்து உள்ளது. அதில் படுகாயம் அடைந்த சேகர், முருகேசன், அண்ணாமலை, பாரதி, கணேசன்,  கணபதி, கண்ணன், முனுசாமி, நரசிம்மன், ரங்கநாதன் மற்றும் வீரபத்திரன் ஆகிய  12 பேரை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து மார்க்கெட் பகுதியில் அந்த வெறிநாய் சிலரை  கடித்த போது பொதுமக்கள் வெறி நாயை அடித்துக் கொன்று விட்டனர். அதன்பிறகு தகவலறிந்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம்  நலம் விசாரித்து பழம் மற்றும் பிஸ்கட் வழங்கியுள்ளார். இதுகுறித்து  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |