கடந்த 24 மணிநேரத்தில் ‘கெட்டோ’ நிதி திரட்டும் அமைப்பிற்கு, ரூபாய் 3 கோடிக்கு மேல் நிதி வசூலாகி இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோன வைரஸின் 2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. எனவே இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர் .அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இருவரும் ,’கெட்டோ’ நிறுவனத்தின் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முதற்கட்டமாக இந்த தம்பதி, ரூபாய் 2 கோடியை நன்கொடையாக வழங்கியது.
இதைத்தொடர்ந்து மற்றவர்களும் நிதி உதவி வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ‘கெட்டோ’ நிதி திரட்டும் அமைப்பிற்கு ,ரூபாய் 3 கோடியே 60 லட்சம் நிதி வசூலாகி இருப்பதாக ,விராட் கோலி தெரிவித்துள்ளார். தன்னுடை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் ,’நிதி திரட்டும் முயற்சிக்கு கிடைத்துள்ள ,மிகப் பெரிய ஆதரவு எங்களை திகைக்க வைக்கிறது’ என்றும் , ‘நம்முடைய இலக்கை எட்டுவதற்கு தொடர்ந்து போராடுவோம் .தேசத்திற்கு உதவிடுவோம’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
3.6 crores in less than 24 hours! Overwhelmed with the response. Let’s keep fighting to meet our target and help the country. Thank you.🙏#InThisTogether #ActNow #OxygenForEveryone #TogetherWeCan #SocialForGood@ketto @actgrants pic.twitter.com/ZCyAlrgOXj
— Virat Kohli (@imVkohli) May 8, 2021